சிறந்த சேவையாற்றி விடைபெற்ற இராணுவ அதிகாரிக்கு பள்ளிவாசல்கள் சம்மேளனம் கௌரவிப்பு !

நூருல் ஹுதா உமர்

கொரோனா காலம் முதல் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் அக்கரைப்பற்று பிராந்தியத்தில் சிறப்பாக தொழிற்பட்ட அக்கரைப்பற்று 241 வது படைப்பிரிவின் கட்டளைத்தளபதி ஜனஹ விமலரத்ன அவர்களுக்கு சேவை நலன் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு அக்கரைப்பற்று ஜும்ஆ பள்ளிவாயலில் சம்மேளனத்தின் தலைவர் எஸ்.எம். சபீஸ் தலைமையில் அக்கரைப்பற்றில் இடம்பெற்றது.

அக்கரைப்பற்று அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனமும் அக்கரைப்பற்று ஜம்மியத்துல் உலமா சபையும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில் கடந்த காலங்களில் அக்கரைப்பற்று பிராந்திய மக்களுக்கு 241 வது படைப்பிரிவின் கட்டளைத்தளபதி ஜனஹ விமலரத்ன அவர்கள் செய்த சேவைகள் நினைவு கூறப்பட்டு நன்றி நவிலல் இடம்பெற்றதுடன் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டார்.

இந் நிகழ்வில் சம்மேளனத்தின் செயலாளர் அஷ்ஷேஹ் ஏ.எம். றஃமத்துல்லாஹ், பொருளாளர் ஏ.எல். தெளபீக் , உலமாக்கள், பாதுகாப்பு படையினர், பள்ளிவாசல்களின் நிருவாகிகள் உட்பட பிரமுகர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்