பொது சுகாதார பரிசோதகருக்கு துப்பியவருக்கு விளக்கமறியல்.

பொது சுகாதார பரிசோதகருக்கு துப்பியதற்காக கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இம்மாதம் 17 ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் இன்று (04) குளியாப்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

கிரிவுல்லா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புஸ்கொலதெனிய பகுதியில் கோவிட் தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படும் நபரின் வீட்டிற்கு வந்த நாரம்மால மருத்துவ அதிகாரி அலுவலகத்தில் கடமையாற்றும் பொது சுகாதார பரிசோதகரை தாக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 48 வயது நபர்  மதுபாவனையாளர் என போலீசார் தெரிவித்தனர்.