வாழைச்சேனையில் முற்றாக தீயில் தேசமடைந்த வீடு மற்றும் உடமைகள் – கல்வி உபகரணங்கள் அழிவு

ந.குகதர்சன்

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வாழைச்சேனை ஹைராத் வீதியில் வீடு தீயினால் சேதமடைந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தார்.

வாழைச்சேனை ஹைராத் பள்ளிவாயலுக்கு முன்பாக உள்ள மிக்ஸர் வியாபார நிலைய உரிமையாளரின் வீடே தீயினால் சேதமடைந்துள்ளதுடன், வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தீயினால் உயிர் ஆபத்து எதுவும் இடம் பெறவில்லை என்றும் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

தீயினால் வீட்டின் அறை முற்றாக சேதமடைந்துள்ளதுடன், வீட்டில் இருந்த மின் பாவனைப் பொருட்கள், பெறுமதிமிக்க வீட்டுப் பொருட்கள், பிள்ளைகளின் கல்வி உபகரணங்கள் மற்றும் ஒரு தொகை பணம் என்பன தீயினால் முற்றாக சேதடைந்துள்ளதாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்தார்.

வீட்டின் உரிமையாளர் வியாபார நடவடிக்கையில் இருந்ததாகவும். குடும்பத்தார் உறவினரின் வீட்டிற்கு சென்ற சமயம் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் தெரியவில்லை என்றும் வீட்டின் உரிமையாளர் தெரிவித்தார்.

????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????