மண்முனை தென்மேற்கு பிரதேச மக்களுக்கு சுகாதார துறையினரின் அறிவித்தல்

நாளை 04.08.2021 அன்று காலை மு.ப. 09.00 மணி தொடக்கம் பி.ப. 03.00 மணி வரை மகிழடித்தீவு, பண்டாரியாவெளி, அரசடித்தீவு, வால்கட்டு, கடுக்காமுனை, அம்பிளாந்துரை, கற்சேனை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 03 மாத காலம் கடந்த கர்ப்பவதிகள் மகிழடித்தீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திலும், 30 வயதிற்கு மேற்பட்ட இதுவரை கொரோனா தடுப்பூசியினைப் பெறாத மேற்படி இடங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மகிழடித்தீவு வைத்தியசாலையிலும் கொரோனா தடுப்பூசியினைப் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

நாளை 04.08.2021 அன்று காலை 09.00 மணி தொடக்கம் பி.ப.03.00 மணி வரை கொக்கட்டிச்சோலை, முதலைக்குடா, முனைக்காடு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 03 மாத காலம் கடந்த கர்ப்பவதிகளும், 30 வயதிற்கு மேற்பட்ட இதுவரை கொரோனா தடுப்பூசியினைப் பெற்றுக் கொள்ளாத பொதுமக்களும் முனைக்காடு விவேகானந்தா மகா வித்தியாலயத்தில் கொரோனா தடுப்பூசியினைப் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம்
பட்டிப்பளை.