மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின அதிரடி தகவல்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு, கோறளைப்பற்று மத்தி, ஏறாவூர், காத்தான்குடி ஆகிய பகுதிகள் தொடர்ந்து சிவப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்ற ஊடக சந்திப்பில் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன்  இத்தகவலை  குறிப்பிட்டார்.

அதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இதுவரையில் 278000 தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்ற நிலையில் இதுவரையில் 206000 தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளதாகவும்  கூறினார்.

மேலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 58 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன், அங்கு இதுவரை 8525 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்  தெரிவித்தார்.