களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் தாதியர்கள் ஆர்ப்பாட்டம்.

களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் தாதியர்கள் பல்வேறு வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டம்.

(ரக்ஸனா)

களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் தாதியர்கள் பல்வேறு வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு புதன்கிழமை(28) நண்பகல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசே தாதிய சேவையை பதவிநிலை சேவை என சுற்று நிருபம் வெளியிடுஇ அரசே கொரோனா வாட்டுக்களுக்கு வழங்க ஒப்புக்கொண்ட வசதிகளை வழங்குஇ அரசே வர்த்தமானி பத்திரிகை உடன் வெளியிடு இன்றேல் தொழிற்சங்க நடவடிக்கை தொடரும்இ தாதிய உத்தியோகஸ்த்தர்களின் உயிர் ஆபத்தை தடுக்க என்.95 முகக்கவசம் வழங்குஇ வாரத்தில் 5 நாட்கள் வேலை தொடர்பாக ஆணைக்குழுவை நியமிஇ தரம் – இரண்டுஇ ஐந்து வருடங்கள்இ தரம் ஒன்று 12 வருடங்கள் பதவி உயர்வு சுற்று நிருபத்தை விரைவாக வெளியிடுஇ

உள்ளிட்ட பல வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு வைத்தியாசாலையினுள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது அரச தாதிய உத்தியோகஸ்த்தர் சங்கத்தின் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக் கிளையின் தலைவர் வித்தியாபதி உள்ளிட்ட பல தாதிய உத்தியேகஸ்த்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.