இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையால் கொவிட் உபகரணங்கள் வழங்கி வைப்பு.

(ரக்ஸனா)

இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கும், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைத் திணைக்களத்திற்கும் சுகாதார ஊழியர்களுக்கான கொவிட் – 19 பாதுகாப்பு அங்கிகள், முக்க கவசங்கள், உள்ளிட்ட பொருட்கள் செவ்வாய்கிழமை(27) வழங்கி வைக்கப்பட்டன.

இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைமையகத்தின் ஒருங்கிணைப்பில் கொழும்பு மாவட்டக் கிளையால் மிச்சலின் பவுண்டேனின் நிதி உதவியில் மட்டக்களப்புக் கிளையால் இப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இலங்கைச் செஞ்சிலுசை சங்கத்தின் மட்டக்களப்புக் கிளை தலைவர் த.வசந்தராசா, செயலாளர் சா.மதிசுதன் பொருளாளர் வ.சக்திவேல் கள நிறைவேற்று உத்தியோகஸ்த்தர் திருமதி பி.வேணுஷா உள்ளிட்டோர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு நேரில் சென்று வைத்தியசாலைப் பணிப்பாளர் திருமதி.க.கலாறஞ்சினியிடமும், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குச் சென்று அதன் பணிப்பாளர் வைத்தியர் நா.மயூரனிடமும் இப்பொருட்களைக் உத்தியோக பூர்வமாக கையளித்துள்ளனர்.

தற்போதைய கொவிட் – 19 நிலமையைக் கருத்திற் கொண்டு இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளை தமக்கு இவ்வாறான பொருட்களைத் தந்துதவியதற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக இதன்போது பணிப்பாளர்கள் தெரிவித்தனர்.