என்.எப் ஐமாவுனை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு

இலங்கை நிர்வாக சேவைக்கு தெரிவு செய்யப்பட்ட பாராட்டு..
===========================
(சர்ஜுன் லாபீர்)

கல்முனை பிரதேச செயலகத்தில் பட்டதாரி பயிலுனராக கடமையாற்றி இலங்கை நிர்வாக சேவை பரீட்சையில் சித்தியடைந்து எதிர்வரும் 2ம் திகதி பயிற்சிகளுக்காக செல்ல இருக்கும் மருதமுனையைச் சேர்ந்த என்.எப் ஐமாவுனை பாராட்டி கெளரவிக்கும்  நிகழ்வு  இன்று(28 )கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி தலைமையில் கல்முனை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜெளபர்,சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.ஆர்.எம் சாலீஹ்,நிர்வாக உத்தியோகத்தர் எம்.என்.எம் றம்சான்,அபிவிருத்தி ஒருங்கிணைப்பாளர் கே.எல் யாஸீன் பாவா,பிரதம  முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சனூபா நெளபல் உட்பட காரியாலய உத்தியோகத்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.