தாதியர்கள் நண்பகல் 12 மணி தொடக்கம் 01 மணிவரை ஒரு மணிநேர வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்

பைஷல் இஸ்மாயில்

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை  நிறைவேற்றாததால், இன்று (28) நாடுபூராகவும் தாதியர்கள் நண்பகல் 12 மணி தொடக்கம் 01 மணிவரை ஒரு மணிநேர வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

அதற்கமைவாக, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின்

தாதியர்கள் வாரத்தில் 05 நாட்கள் வேலை தொடர்பான ஆணைக் குழுவை நியமி, தாதியசேவை பதவிநிலை சேவையென சுற்றுநிருபம் வெளியிடு, தாதிய உத்தியோகத்தரின் உயிராபத்தைத் தடுக்க N95 முகக்கவசத்தை வழங்கு, தாதிய உத்தியோகத்தர்களுக்கு  N95 முகக்கவசங்கள் வழங்காதது ஏன்? கொரோனா விடுதிகளுக்கு வழங்க ஒப்புக்கொண்ட வசதிகள் எங்கே?, ஒப்புக்கொண்ட அந்த வசதிகளை வழங்கு, தரம்  II – 5  வருடங்கள், தரம் I –  12 வருடங்கள் என்ற பதவியுயர்வு சுற்று நிருபத்தை விரைவாக வெளியிடு, பதவி நிலை சுற்று நிருபம் எங்கே?

வர்த்தமானிப் பத்திரிகையை உடனே வெளியிடு, வர்த்தமானிப் பத்திரிகை உடன் வெளியிடு இன்றேல் தொழிற்சங்க நடவடிக்கை தொடரும் என்ற கோசங்களை எழுப்பினர்.