ஓட்டமாவடியில் ஆற்றங்கரை ஓரத்தில் கண்டல் தாவரங்கள் நடும் நிகழ்வு

????????????????????????????????????

ந.குகதர்சன்

கண்டல் தினத்தினை முன்னிட்டு ஓட்டமாவடி அமீர் அலி விளையாட்டு மைதான அருகாமையிலுள்ள ஆற்றங்கரை ஓரத்தில் கண்டல் தாவரங்கள் நடும் நிகழ்வு இன்று புதன்கிழமை இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் குடும்பிமலை பகுதிக்கான வன இலாகா அதிகாரி ஏ.யூ.எம்.ஹியாஸ், வாழைச்சேனை வன விரிவாக்கல் உத்தியோகத்தர் எஸ்.எம்.சபீக் மற்றும் கல்குடா ஹப்பி எய்ட்  அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

 

வாழைச்சேனை வட்டார வன இலாகா திணைக்களத்தின் ஏற்பாட்டில் கல்குடா ஹப்பி எய்ட்  அமைப்பின் ஒத்துழைப்புடன் கரையோர வளத்தினை பாதுகாக்கும் வகையில் கண்டல் தாவரங்கள் நடப்பட்டது.

????????????????????????????????????
????????????????????????????????????