ஹெரோயினுடன் குடும்பஸ்தர் கைது

கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அல் அக்சா பாடசாலை வீதியில் குடும்பஸ்தர் ஒருவரை ஹெரோயின் போதைப் பொருளுடன்  நேற்று(26)கைது செய்யப்பட்டுள்ளதாக போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்தார்.

தங்களுக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து மேற்கொண்ட சுற்றிவலைப்பின் போது  400 கிராமும் 300 மில்லி கிராமும் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவித்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் கிண்ணியா அல்அக்ஸா வீதியில் வசிக்கும் குருநாகலையை சேர்ந்த வயது (58) குடும்பஸ்தர் எனவும் தெரியவருகிறது. கைது செய்யப்பட்ட நபரையும் உரிய போதை பொருளையும் கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட நபரை திருகோணமலை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கிண்ணியா பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.