தனது மனைவியை பற்றி அவதூறாக பேசிய நபரிடம் கேட்க சென்றவர் மீது கத்திகுத்து – தாக்குதலை நடாத்தியவர் தப்பி ஓட்டம்– மட்டு கல்லடியில் சம்பவம்–

(வவுணதீவு எஸ்.சதீஸ்,
மட்டக்களப்பு கல்லடியில்; தனது மனைவியைபற்றி அவதூறாக பேசியது நபர் ஒருவரிடம் அது தொடர்பாக கேட்க சென்றவர் மீது கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் கத்திக் குத்து தாக்குதலை நடாத்தியவர் தப்பி ஓடிய சம்பவம்  திங்கட்கிழமை (26) பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

இது பற்றி தெரியவருவதாவது
காத்தன்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கல்லடி டச்பார்வீதி, 8 ம் குறுக்கு வீதியில் யுள்ள கத்தி குத்துக்கு இலக்கானவர் சம்பவதினமான இன்று பிற்பகல் அதே வீதியிலுள்ள தனது வீட்டிற்கு அருகாமையிலுள்ள  குறித்த நபரின் வீட்டிற்கு சென்று தனது  மனைவியைபற்றி அவதூறாக் பேசியது தொடர்பாக அவரிடம் கேட்டுள்ளார்.
இந்த நிலையில் இருவருக்குமிடையில் வாய்தர்க்கம் எற்பட்ட நிலையில்  குறித்த நபர் அவதூறு தொடர்பாக கேட்க சென்றவர் மீது கத்திகுத்து தாக்குதலை நடாத்தியதையடுத்து 43 வயதுடைய நபர  படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்
இதேவேளை கத்திகுத்து தாக்குதலை நடாத்திய 32 வயதுடைய நபர் தப்பி ஓடி தலைமறைவாகியுள்ளதாக  பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக தப்பி ஓடிய நபரை கைது செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.