ஊடகவியலாளர்கள் வெறுமனே அறிக்கையாளர்கள் மாத்திரம் அல்ல – மஹிந்த

ஊடகவியலாளர்கள் வெறுமனே அறிக்கையாளர்கள் மாத்திரம் அல்லாமல் அவர்களுக்கு பல விடையங்களை ஆராய வேண்டிய பொறுப்பு காணப்படுகின்றது. குறிப்பாக விமர்சன ரீதியான கட்டுரைகளை எழுதி கேள்விகுட்படுத்துவதன் மூலம் மக்களின் வாக்குரிமைகளைப் பாதுகாக்கும் சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவரும் தற்போதைய எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவருமான மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இலங்கை இளம் ஊடகவியலாளர்களின் சங்கம் புதன்கிழமை(21) ஏற்பாடு செய்திருந்த சூம் தொழில் நுட்பத்தினுடான கலந்துரையாடலின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்…

ஒரு நாட்டைப் பொறுத்தவரையில 3 வகையான முக்கிய துறைகள் காணப்படுகின்றன. ஒன்று நிறைவேற்று அதிகாரம், அமைச்சரவை, நீதித்துறை ஆகியனவாகும் சட்டங்களை ஆக்குகின்ற ஒரு உயர்பீடம்தான் பாராளுமன்றம். அரசியல்வாதிகள் அந்த சட்டவாக்க முயற்சிகளுக்குத் தேவையான விடயங்களையும், விதிமுறைகளையும், முன்வைக்கின்ற சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன. நாட்டின் இறையாண்மையை பாதுகாக்கின்ற விடையத்தில இந்த மூன்று தரப்பினரும் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டும். வாக்குரிமை மற்றும் தகவல் அறியும் உரிமை, கருத்துக் கூறும் உரிமை மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இருக்கின்ற அரசாங்கம் தொடர்ந்து இருக்க வேண்டுமா அல்லது இன்னுமொரு புதிய அரசாங்கத்தை ஏற்படுத்த வேண்டுமா, வேலைவாய்ப்பு, சுகாதாரம், உள்ளிட்ட மக்களுடைய நலன் சார்ந்த விடையங்களை ஏற்படுத்துவதற்கு உரிய தேவையை நிறைவேற்றுவதற்கு மக்களுக்கு அந்த அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

சட்டத்திற்கு முரணான போராட்டங்கள் நடைபெறுகின்போது, வன்முறை போன்ற சந்தர்ப்பங்களுக்கும் ஆளாகுன்றனர். இந்நிலையில் எம்மிடம் உள்ள ஆயுதம்தான் தகவலறியும் சட்டமூலம். அதனைப் பயன்படுத்தி உரிய அதிகாரிகள் மட்டத்தில் தகவல்களைப் பெற்றுக் கொண்டு இணக்கமான முறையில் நாம் செயற்படல் வேண்டும். ஏதாவது ஒரு சம்பவத்திற்கு போராட்டங்களுக்காக வீதியில் இறங்குவதற்கு முன்னர் இணக்கமான முறையில் செயற்படுவதற்குரிய சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன. உதாரணமாக தேர்தல் காலத்தில் ஊடகங்கள் எவ்வாறு நடந்து கொள்கின்றன என்பது தொடர்பிலும் கேள்விக்குட்படுத்தவும் நமக்குச் சந்தர்ப்பங்கள் உள்ளன. இவ்வாறு செய்வதுதான் போராட்டங்களை செய்வதற்கு முன்னர் மேற்கொள்ளும் சாலச்சிறந்த விடையமாக அமையும்.

ஊடகவியலாளர்கள் வெறுமனே அறிக்கையாளர்கள் மாத்திரம் அல்லாமல் அவர்களுக்கு பல விடையங்களை ஆராய வேண்டிய பொறுப்பு காணப்படுகின்றது. குறிப்பாக விமர்சன ரீதியான கட்டுரைகளை எழுதி கேள்விகுட்படுத்துவதன் மூலம். மக்களின் வாக்குரிமைகளைப் பாதுகாக்கும் சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன. நீண்ட நாட்கள் கடலுக்குச் சென்று மீன் பிடிக்கின்ற மக்களின் வாக்குரிமை பற்றி தேர்தல் கண்ணிப்பு அமைப்புக்கள் மாத்திரமின்றி ஊடக நிறுவனங்களும் கவனத்தில் எடுக்க வேண்டும். அதுபோல் வட மாகாணத்திலிருந்து நாடற்றவர்களாக இந்தியாவிலே தங்கியிருப்பவர்கள் தொடர்பிலும் ஆய்வு ரீதியில் செயற்பட்டு தீர்வு கிட்டுவது சாலச் சிறந்தது. தற்போதைய நிலையில் கொவிட் – 19 வக்சீன் தொடர்பில் தமிழ், முஸ்லிம், சிங்களவர் என சிலர் இன்னும் ஏற்க மறுக்கின்றனர். ஏன் என ஆராய வேண்டும்.

ஊடகவியலாளர்கள் மிகவும் காத்தரமான பங்களிப்புக்களை வழங்குகின்றார்கள். இரண்டு ஊடகவியலாளர்கள் வாக்குரிமையை நீதிமன்றம் சென்று பெற்றுக் கொடுத்த விடயம் காணப்படுகின்றனது. செய்திப் பத்திரிகை ஒன்றை ஒரு அரசியல்வாதி விற்பனை செய்வதற்கு தடை ஏற்படுத்தியபோது அதற்கு எதிராக தகவல் உரிமை மறுப்பப்படுகின்றது என நீதிமன்றம் சென்று பெற்றுக் கொடுக்கப்பட்டிருந்தது. எனவே மக்களுடைய பிரச்சனைகளை வெளிக் கொணர்கின்ற தூணாக ஊடாகவியலாளர்கள் காணப்படுகின்றார்கள். இவ்வாறு ஊடகவியலாளர்களும், சிவில் அமைப்பினரும் மக்கள் சார்ந்து செயற்படுகின்றபோது அரசாங்கத்திற்கு எதிரான இரண்டு குழுக்கள் என நினைக்கக்கூடும். அது அவ்வாறு அல்ல ஒரு ஜனநாயக ரீதியான செயற்பாடுகளைக் கொண்டு செல்வதற்காகத்தான் அவர்கள் செயற்படுகின்றார்கள். மக்களுக்குக் காணப்படுகின்ற வாக்குரிமை சமூக நீதியைக் கொண்டு மக்களுக்கு வழங்கப்படுகின்றதா என்பதையும் சிந்திக்க வேண்டும்.

கொச்சிக்கடை, கட்டுவாப்பிட்டிய, மட்டக்களப்பு, மினுவாங்ககொட, நிக்கவரட்டிய, போன்ற இடங்களில், ஏற்பட்பட சம்பவங்களின் வேதனை எமக்கும் ஏற்பட வேண்டும். இவ்வாறான சம்பவங்களை அறிக்கையிடல் மாத்திரமின்றி பாதிக்கப்பட்ட மக்களின் உணர்வு ரீதியாகவும் செயற்படல் வேண்டும். இவ்வாறான சம்பவங்களில் கைது செய்யப்பட்டவர்களின் நிலமை என்ன என்பது தெரியாதவர்களும் இருக்கின்றார்கள். அனைவரும் சிந்துவது ஒரே மாதிரியான இரத்தம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே ஊடகவியலாளர் அன்பு, கருணை, தயாளகுணம் கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும்.

எல்லை நிர்ணயம் தொடர்பில் பொலிஸ், உள்ளுராட்சி, பிரதேச செயலகம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் செயற்பட்டு வருகின்ற மாகாண சபை தேர்தல் வரவேண்டுமாக இருந்தால் ஒரு முறையானதொரு எல்லை நிர்ணயம் செய்யப்பட்டதன் பின்னர் நடைபெறவேண்டும் அல்லது பாராளுமன்ற சட்டத்தின் மூலம் தான் அது நடைபெற வேண்டும் என எனது தனிப்பட்ட கருத்தை தெரிவிக்கின்றேன். தற்போதைய நிலையில் மாகாண சபைத் தேர்தல் எந்த முறையில் நடைபெறவுள்ளது என்பது தொடர்பில் தெரியாது குறிப்பாக ஏற்கனவே உள்ளுராட்சி மன்ற தேர்தல் நடைபெற்ற வட்டாரா முறையில் மாகாண சபைத் தேர்தல் நடைபெறுவதற்கான சந்தர்ப்பம் இருக்கின்றது.

இல்லையேல் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பாராளுமன்றில் தனிப்பட்ட பிரேரணையைக் கொண்டு வந்து அதனை அனைவரும் ஏற்றுக் கொண்டு அதனை ஜனாதிபதி தலைமையிலான அமைச்சரவைக்கு முன்மொழிவு செய்து பாராளுமன்றத்திலே அங்கீகரிக்கப்பட்டு அது புதிய விடங்களுக்குச் செல்ல முடியும்.

எனவே ஊடகவியலாளர்களும், அரசியல்வாதிகளும், முக்கியமானவர்களாகக் காணப்படுகின்றார்கள். தவறு செய்யதாவர்களாக அரசியல்வாதிகள் இருத்தல் வேண்டும். சமூகப் பொறுப்பு இருக்க வேண்டும். நல்ல மனிதர்களை குறிப்பாக இளைஞர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்புதல் போன்ற புதிய விடையங்களையும் புகுத்த வேண்டியுள்ளது. இவை அலசி ஆராயப்பட வேண்டிய விடையமாகவுள்ளது என அவர் இதன்போது தெரிவித்தார்.