மாமாங்க உற்சவம் கொடியேற்றம் தீர்த்தமின்றி நடைபெறும்.

மண்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கான கொவிட் நிலை தொடர்பாக ஆராய்வதற்கான குழு கூட்டம் இன்று நடைபெற்றது.
மட்டு மாமாங்கம் ஆலயத்தின் கொடியேற்றம் மற்றும் தீர்த்தோற்சவம் தொடர்பாக இங்கு கலந்துரையாடப்பட்டது.

 இந்த ஆண்டு கொவிட் தொற்று காரணமாகவும் அரசாங்க சுற்று நிருபத்திற்கமைவாகவும். இம் முறை கொடியேற்றம் தீர்த்தோற்சவம் சுவாமி வெளிவீதி வலம் இடம்பெறாமல் உள்வீதிவலம் வரலுடன்  பகல் நேர பூசைகள் மட்டும் நடைபெறும் என முடிவெடுக்கப்பட்டது.
 அத்துடன் 100 பேருக்கு மேற்படாமல் ஆலய சூழலில் மாமாங்கேஸ்வரரை வழிபாடுமாறு முடிவெடுக்கப்பட்டது.
மேலும் அனுமதிக்கப்பட்ட 100 பேருக்கும் அனுமதி அட்டை வழங்குவதன் மூலம் மட்டுப்படுத்தப்படவுள்ளது என மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் எஸ்.வாசுதேவன்  மண்முனை வடக்கு பிரதேச சபையில் இன்று இடம்பெற்ற கொவிட் நிலை பற்றி ஆராயும் கூட்டத்தில் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
இங்கு மாமாங்கேஸ்வரர் ஆலய உற்சவம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது இக் விசேட கூட்டத்தில் மண்முனை வடக்கு பொது சுகாதார வைத்திய அதிகாரி எஸ். கிரிசுதன் பொலிஸ் உயர் அதிகாரிகள் மண்முனை வடக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பிரதிதிட்டமிடல் பணிப்பாளர் மற்றும் பொது சுகாதார பரிசேதகர்கள் மாமாங்கஆலய நிர்வாகத்தினர் எனப் பலரும் கலந்துகொண்டனர்.