திருக்கோவில் பிரதேசத்தில் மக்கள் ஆர்வத்துடன் சினோபார்ம் தடுப்பூசியை ஏற்றிக் கொண்டனர்.

திருக்கோவில்  நிருபர்-எஸ்.கார்த்திகேசு)

கல்முனை திருக்கோவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவில் மக்கள் மிகவும் ஆர்வத்துடன் வருகைதந்து தமக்கான சினோபார்ம் கொவிட் 19 தடுப்பூசியை ஏற்றிக் கொண்டுள்வதாக திருக்கோவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பி.மோகனகாந்தன் தெரிவித்திருந்தார்.

திருக்கோவில் பிரதேசத்தில் பொது மக்கள் தமக்கான தடுப்பூசிகளை ஏற்றுவதற்காக திருக்கோவில் ஆதார வைத்தியசாலை திருக்கோவில் குமரவித்தியாலய பாடசாலை மண்டபம் மற்றும் தம்பிலுவில் தேசிய பாடசாலை ஆகிய மூன்று இடங்களின்  வகைப்படுத்தப்பட்டு தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இவ் தடுப்பூசி ஏற்றும் தேசிய பணியானது திருக்கோவில் பிரதேசத்தில் இன்றும் (24) முதல் குறிப்பிட்ட இடங்களில் தடுப்பூசிகள் ஏற்றுவதற்கான ஒழுங்குகள் திருக்கோவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதேவேளை திருக்கோவில் பிரதேசத்திற்கு இவ் தடுப்பூசி ஏற்றும் செயற்பாடுகளை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ.சுகுணன் திருக்கோவில் பிரதேசத்திற்கு நேரடியாக விஜயம் செய்து தடுப்பூசிகள் ஏற்றுவதை பார்வையிட்டு இருந்தார்.

அந்தவகையில் 30வயதக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி ஏற்றப்படு வருவதுடன் திருக்கோவில் பிரதேச செயலாளர் மற்றும் அதிகாரிகள் இராணுவம் பொலிசார் ஆசிரியர்கள் முன்னிலைப் பணியாளர்கள் அரச உத்தியோகத்தர்கள் என பலரும் இன்றைய தினம் தடுப்பூசியை ஏற்றிக் கொண்டதுடன் பாலூட்டும் தாய்மார்கள் 13 வாரங்களை பூர்த்தி செய்த கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட ஆகியோருக்கும் இவ் தடுப்பூசி ஏற்றப்பட்டு வருவதாக  சுகாதார பிரிவினர் தெரிவித்து இருந்தனர்