காத்தான்குடியில் முப்பது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சினோபாம் தடுப்பூசி ஏற்றல்

dav

ந.குகதர்சன்

காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் முப்பது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சினோபாம் கோவிட் தடுப்பூசி ஏற்றும் பணிகள் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஏ.எல்.எம்.நபீல் தலைமையில் நடைபெற்று வருகின்றது.

இந்தவகையில் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவிலுள்ள முப்பது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலையில் கொவிட் -19 தடுப்பூசிகள் இன்று சனிக்கிழமை ஏற்றப்பட்டுள்ளது.

கொவிட் -19 தடுப்பூசி ஏற்றும் நிகழ்வில் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஏ.எம்.எம்.பசீர், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், காத்தான்குடி பிரதேச செயலகம், காத்தான்குடி நகர சபை ஆகியவற்றின் உத்தியோகத்தர்கள்,  பாதுகாப்பு பிரிவினர் எனப் பலர் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் முப்பது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பொது மக்களுக்கான சினோபாம் கோவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

sdr
dav
sdr