வீட்டுக்கு வீடு “கப்ருக” வேலைத்திட்டத்தின் மற்றுமொரு கட்டம் மங்களகமவில்!

 செங்கலடி நிருபர்)
ஏறாவூர் பற்று – செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மங்களகம , கெவிலியாமடுவ கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கு கெளரவ இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் அவர்களின் வழிகாட்டலில் அவரது இணைப்புச் செயலாளரான சதாசிவம் மயூரன் அவர்களினால் மங்களகம , கெவிலியாமடுவ பகுதியில் பயனாளிகளுக்கு தென்னங்கன்று வழங்கி வைக்கப்பட்டது. இதில் பிரதான இணைப்பாளர் கிருஷ்ணசாமி பிரஷாந் அவர்களும் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு தலா இரண்டு தென்னங்கன்றுகள் வழங்கி வைத்தனர்.