யூலை 23 படுகொலை நாளில் கல்முனையில் ஆர்ப்பாட்டம்(video/photoes)

பாறுக் ஷிஹான்

யூலை படுகொலையின் 38 ஆவது ஆண்டு நாளான 23 ஆம் திகதி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் கல்முனை நகரில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.

இன்று (23) த.தே.மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இவ் ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் துஷானந் ,மற்றும் கட்சியின் உறுப்பினர்கள், பொதுமக்கள் பதைதைகளை தாங்கியவாறு பங்குபற்றியிருந்தனர்.

தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைகள் ,படுகொலைகளுக்கு சர்வதேசம் நீதியைப் பெற்றுத்தர வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் கருத்து தெரிவித்தார்.