ஆசிரியர்கள் இன்னும் தடுப்பூசி பெறவில்லையா உடனே தெரியப்படுத்துங்கள்

தடுப்பூசி போட ஆசிரியர்கள் என்ன செய்ய வேண்டும் என கல்லியமைச்சு அறிவித்துள்ளது.
கோவிட் 19 தடுப்பூசி பெறாத எந்தவொரு மாகாண அதிபர், ஆசிரியர் அல்லது கல்விசாரா ஊழியர்களுகள் தகவல் தெரிவிக்க வேண்டும் என கல்வி அமைச்சு  வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி நபர்களில் தடுப்பூசி போடாதவர்கள் இருந்தால், அவர்கள் வலயக்கல்விப்பணிமனைக்கு தகவல் அளித்து தடுப்பூசி பெற வேண்டும்  என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கான தடுப்பூசி திட்டங்கள் மாகாண மட்டத்தில் மேற்கொள்ளப்படுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.