கிராமிய பொருளாதாரத்தை ஊக்கவிக்க திட்டம்.

(எருவில் துசி) பின் தங்கிய கிராமிய அபிவிருத்தி மனைசார் கால் நடை வளர்ப்பு சிறு பொருளாதார பயிர்செய்கை இறாஜாங்க அமைச்சின் திட்டமிடலில் கிழக்கு மாகாண ஆளுனர் அவர்களின் பங்களிப்புடன் கிழக்கு மாகாணத்தில் உள்ள விவாசாயிகளை உற்பத்தியில் ஊக்விக்கும் பொருட்டு பிரதேச செயலகங்களை அடிப்படையாக வைத்து ஏனைய துறைசார் தொழில் நுட்ப அறிவினையும் பெற்று துறைசார் திணைக்களங்களையும் உள்ளடக்கிய வகையில் மக்களை ஊக்குவிக்கும் கூட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் திருமதி சி.வில்வரெத்தினம் தலைமையில் (20) இடம்பெற்றது

நிகழ்வில் விசாசாய திணைக்கள அதிகாரிகள் பிரதேச சபை செயலாளர், கமநல உத்தியோகத்தர்கள் மற்றும் உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டு மக்கள் நலன்சார் செயற்பாடுகள் தொடர்பாகவும் சேதன பசளை உற்பத்தியினை ஊக்குவிப்பது தொடர்பாகவும் ஆராயப்பட்டது.