சட்டத்தையும் அதன் அறிவுறுத்தல்களையும் பின்பற்றுமாறு தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய நிருவாகம் பக்தர்களிடம் வேணடுகேள்!

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு

நாட்டினுடைய சூழ்நிலையினை கருத்திற் கொண்டு சட்டத்தையும் அதன் அறிவுறுத்தல்களையும் பின்பற்றுமாறு தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய நிருவாகம் பக்தர்களிடம் வேணடுகேள் விடுத்துள்ளதுள்ளது. இன்று மட்டக்களப்பிலுள்ள கிழக்கு மாகாண ஊடக மன்றத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இதனை தெரிவித்துள்ளனர்

கிழக்கு மாகாணத்தில் சின்ன கதிர்காமம் என்று சிறப்பித்து அழைக்கப்படும் தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய வருடாந்த திருவிழா கடந்த 04.07.2021 ஆந் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பிக்கப்பட்டு திருவிழாக்கள் இடம்பெற்றுவரும் நிலையில் எதிர்வரும் 25.07.2021 ஆந் திகதி ஆலய திருவிழா தீர்த்தோற்சவத்துடன் நிறைவுபெறவுள்ளது.

இதனை முன்னிட்டு ஆலய நிருவாகத்தினர் ஏற்பாடு செய்த ஊடக சந்திப்பின்போது மேலும் தெரிவிக்கையில், பொதுமக்களிடம் விநயமாக கேட்டுக்கொள்வது, நாட்டினுடைய அசாதாரன சூழ்நிலையினை கருத்திற் கொண்டு இவ்வாண்டு அரசினதும் சுகாதார துறையினரின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக ஆலய நிருவாக சபையினரை உள்ளடக்கிய 50 பேருடனே ஆலய திருவிழாக்களை நடாத்த நிருவாக சபையினர் தீர்மானித்ததன் பிரகாரமே திருவிழாக்கள் இடம்பெற்றுவருகின்றது.

எமது ஆலயத்திற்கு வளமையாக பல்லாயிரக்கணக்கில் பக்தர்கள் வருவது வழமை, ஆனால் இவ்வாண்டு கொவிட் சூழ்நிலையினை கருத்திற்கொண்டு பக்தர்கள் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவதற்காக ஆலயத்திற்கு வருகைதருவதனை தவிர்க்கும் முகமாக பக்தர்களுக்காக நாம் வழமையாக மேற்கொள்ளும் குடிநீர், மலசலகூட வசதி மற்றும் அன்னதானம் போன்ற  ஏற்பாடுகளை  மேற்கொள்ளவில்லை என்பதுடன், ஆலயத்தின் இறுதிநாள் தீர்த்தோற்சவத்தினை ஊடகங்கள் வாயிலாக நேரலையாக தருவதற்கு ஏற்பாடுகளை செய்துவருவதாகவும், முருகப்பெருமானை வீட்டிலிருந்தவாறே நினைத்துக்கொண்டு வீட்டிலேயே தீர்த்தமாடுமாறு பக்தர்களை அன்பாக கேட்டுக்கொள்வதாக ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட ஆலயத்தின் தலைவர் முருகேசு அருணனும் மற்றும் ஆலயத்தின் செயலாளர் பொன்னுசாமி டிமலேஸ்வரன் ஆகியோர் இணைந்து பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.