மட்டக்களப்பு மாவட்ட டெங்கு கட்டுப்பாட்டு உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டத்தில் குதிப்பு!!*

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிமனைக்கு உட்பட்ட பகுதிகளில் டெங்கு கட்டுப்பாட்டு உதவியாளர்களாக கடந்த நான்கு வருடத்திற்கு முன்னர் கடமையில் இணைத்துக்கொள்ளப்பட்ட தமக்கான நிரந்தர நியமணத்தினை இதுவரை வழங்காமைக்கு எதிராக இன்று நண்பகல் 12 மணிக்கு மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிமனை முன்பாக கவனயீர்ப்பு ஆர்பாட்டமொன்றினை மேற்கொண்டனர்.

தங்களது சம்பள உயர்வு, நிரந்தர நியமணம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒரு லட்சம் வேலை வாய்ப்புக்குள் தம்மை உள்வாங்கியுள்ளதாக அறிகின்ற போதும் அது தங்களுக்கு சாத்தியமற்றது என்றும் உடனடியாக ஜனாதிபதி இதற்கான தீர்வினை உடனடியாக வழங்க வேண்டுமெனவும் கோரிக்கை முன்வைத்து பதாதைகளை ஏந்தியவாறு கேசமிட்டபடி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்