காரைதீவுசந்திக்கு அருகில் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது.

பாறுக் ஷிஹான்

கேரளா கஞ்சாவினை முச்சக்கரவண்டியில் கடத்தி சென்றவரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் காரைதீவு சந்திப்பகுதியில் இன்று(19) மதியம் கல்முனை விசேட பிரிவின் தகவலுக்கமைய இக்கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முச்சக்கரவண்டி ஒன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடுவதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய காரைதீவு சந்திக்கு அருகில்   சம்மாந்துறை பொலிஸார் தேடுதல் நடாத்தி  சுமார் 43 வயதுடைய கல்முனை பகுதியை சேர்ந்த  சந்தேக நபர் ஒருவரை  1 கிலோ கேரளா கஞ்சாவுடன் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைதாகிய சந்தேக நபர் உட்பட அவர் பயணம் செய்த முச்சக்கரவண்டி சான்று பொருட்கள் சகிதம்  சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

மேலும் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.