வாழைச்சேனையில் போதைப் பொருள் வியாபாரி ஒருவர் கைது.

????????????????????????????????????
ந.குகதர்சன்
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வாழைச்சேனை கோழிக்கடை வீதியில் வைத்து போதைப் பொருள் வியாபாரி ஒருவர் இன்று திங்கள்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளதுடன் வியாபாரத்திற்கு பயன்படுத்திய முச்சக்கரவண்டியும் கைப்பற்றப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய சுற்றுச்சூழல் பொறுப்பதிகாரி எஸ்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.

வாழைச்சேனை பகுதியில் மிக நீண்ட நாட்களாக போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த 41 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடம் இருந்து ஒரு கிலோ கிராம்  கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதுடன் வியாபாரத்திற்கு பயன்படுத்திய முச்சக்கர வண்டியும் கைப்பற்றப்பட்டுள்ளது.
வாழைச்சேனை காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுனவின் வழிகாட்டலில் பொலிஸ் நிலைய சுற்றுச்சூழல் பொறுப்பதிகாரி எஸ்.எம்.எம்.ஹரீஸ் தலைமையில் சென்ற பொலிஸார் மேற்கொண்ட சுற்றி வலைப்பின் போதே மேற்படி போதைப் பொருள் வியாபாரி கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடம் இருந்து கேரளா கஞ்சாவும் கைப்பற்றப்பட்டுள்ளது