5 இலட்சம் பெறுமதியான ஒரு தொகுதி கொவிட் தடுப்பு பயன்பாட்டு கருவிகள்

வி.சுகிர்தகுமார்
சேர்ஜ் போ கிறவுண்ட் (Search for Common Ground)  நிறுவனத்தின் முழுமையான நிதி பங்களிப்புடன் அக்கரைப்பற்று பாதிப்புற்ற பெண்கள் அரங்கத்தினூடாக அக்கரைப்பற்று பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் மற்றும் அக்கரைப்பற்று பிரதேச வைத்தியசாலை கொரோன சிகிச்சை நிலையத்திற்குமான 5 இலட்சம் பெறுமதியான ஒரு தொகுதி கொவிட் தடுப்பு பயன்பாட்டு கருவிகள் இன்று வழங்கி வைக்கப்பட்டன.
ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார பதில் வைத்திய அதிகாரி எஸ்.அகிலனின் கோரிக்கைக்கு அமைய சேர்ஜ் போ கிறவுண்ட் நிறுவனத்தின் முழுமையான நிதி பங்களிப்புடன் அக்கரைப்பற்று பாதிப்புற்ற பெண்கள் அரங்கத்தினூடாக நடைமுறைப்படுத்தப்படுகின்ற கற்றல் மற்றும் தலைமைத்துவத்தில் பெண்கள், சமாதானம், நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதற்காக பெண்களை வலுவூட்டல் எனும் செயற்றிட்டத்தின் மூலம் அம்பாரை மாவட்ட உள்ளுராட்சி சபை பெண் உறுப்பினர்களை உள்ளடக்கி உருவாக்கப்பட்ட வில் கிளப்பினால்  (WILL Club) குறித்த உபகரணங்கள் கையளிக்கப்பட்டன.
கொவிட் 19 தொற்றினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் சிகிச்சைக்காகவும் அதேநேரம் பாதுகாப்பிற்காகவம்  ஸ்பிறே மெசின் மற்றும் ஒக்சிசன் கென்சன்றேட்டர் பொக்கிங் மெசின், கொவிட் விழிப்புணர்வு லைட்ற்றிங் வோட்  (Spraying Machine,  Oxygen Concentrator, Fogging Machine, COVID 19 Awareness light board)  உள்ளிட்ட சுமார் ஐந்து இலட்சம்  பெறுமதியான பொருட்கள் சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.அகிலனிடம்; வழங்கி வைக்கப்பட்டன.
இதேநேரம் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் நிறுவப்பட்டுள்ள பிரமாண்டமான கொவிட் விழிப்புணர்வு லைட்ற்றிங் வோட்டும் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்விpல் ஆலையடிவேம்பு பிரதேச செயலக சிரேஸ்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.பி.ரவிச்சந்திரன் சமுhத்தி தலைமையக முகாமையாளர் என்.கிருபாகரன்  அரசாங்க அரச சார்பற்ற நிறுவனங்களின் இணைப்பாளர் இர்பான், அம்பாரை மாவட்ட அரசசார்பற்ற இணையத்தின் தலைவர் வி.பரமசிங்கம், வில் கிளப்பில் அங்கத்துவம் வகிக்கும் உள்ளுராட்சி சபை பெண் உறுப்பினர்களான திருமதி.எஸ்.கிந்துஐh. திருமதி.எஸ்.எம்.சித்தி நிலுபா, மற்றும் பாதிப்புற்ற பெண்கள் அரங்க திட்ட இணைப்பாளர்களான திருமதி.கமலவாணி சுதாகரன், திருமதி.ஜணுசியா சுஜிதராஜ்
திருமதி. சுமந்தி தவராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது கருத்து தெரிவித்த பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி குறித்த உபகரங்களை வழங்கி நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்ததுடன் விரைவில் 50 ஆயிரம் தடுப்பூசிகள் கல்முனை பிராந்தியத்திற்கு கிடைக்கவுள்ளதாகவும் இதனை மக்கள் முறையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.