கிழக்கு மாகாண  கல்விப் பணிப்பாளராக  திருமதி.நகுலேஸ்வரியை நியமிக்க நடடிக்கை.இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்

(ரக்ஸனா)

கிழக்கு மாகாண  கல்விப் பணிப்பாளர் பதவி திருமதி.நகுலேஸ்வரி புள்ளநாயகம் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும். தற்போதும் அதற்குரிய கடுமையான முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கின்றோம்,என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சின் மாணவர்களுக்கம், ஆசிரியர்களுக்கும், ரெப் கணணிகளை வழங்கும் செயற்றிட்டத்தின் கீழ்  சனிக்கிழமை(17) மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு கல்வி வலயத்திற்குபட்ட்ட 14 பாடசாலைகளுக்கு 778 ரெப் கணணிகள் வழங்கு வைக்கும் நிகழ்வு வெல்லாவெளி கலைமகள் வித்தியாலய கேட்போர் கூட்டத்தில் வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்….

அடுத்த கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் பதவி தமிழருக்கானது இந்த வாய்ப்பை தாரை வார்க்கத் துணைபோகும் தமிழ் தலைவர்கள் என தெரிவித்து என்னுடைய பெயரையும் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சந்திரகாந்தன் அவர்களுடைய பெயரையும் இட்டு கல்விச் சமூகம் கிழக்கு மாகாணம் என எனக்கு ஒரு மொட்டைக் கடிதம் வந்துள்ளது.

சிரேஸ்ட பதவி நிலையில் இருக்கின்ற பட்டிருப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி.நகுலேஸ்வரி புள்ளநாயகம் அவர்களை கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக நியமிக்குமாறு முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனர் ரோகித போகல்லாகமவிடம் எடுத்துரைத்தோம். ஆனால் முன்னாள் அரசியல்வாதிகள் திருமதி.நகுலேஸ்வரி புள்ளநாயகம் அவர்களை அப்பதவிக்கு நியமிக்கக் கூடாது பட்டிருப்பு கல்வி வலயத்திற்கும் வரக்கூடாது என என செயற்பட்டார்கள். அவ்வாறானவர்கள்தான் தற்போது மொட்டத் துண்டுப்பிரசுரங்களை வெளியிடுகின்றார்கள்.

மாவட்டத்திலே சிரேஸ்ட நிலையிலுள்ளவர்களை அடுத்தடுத்து பதவி நிலைகளுக்குத் கொண்டு வந்தால்தான் அடுத்தடுத்து எம்மவர்களுக்கான வாய்ப்புக்கள் கிடைக்கும் என நாங்கள் கலந்துரையாடியுள்ளோம். இவ்வாறான விடையங்களை நாசமாக்கியவர்கள் இந்த மாவட்டத்தினுடைய முன்னாள் அரசியல்வாதிகள்தான்.

கிழக்கு மாகாண  கல்விப் பணிப்பாளர் பதவி திருமதி.நகுலேஸ்வரி புள்ளநாயகம் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும். தற்போதும் அதற்குரிய கடுமையான முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கின்றோம்.

சில ஊடக நிறுவனங்கள் மிகவும் சிறப்பாகச் செயற்படுகின்றன. நாங்கள் ஊடக சுதந்திரத்தை மதிக்கிறோம், ஊடகங்களை வரவேற்கிறோம். ஆனால் ஒரு சிலர் சமூக ஊடகங்களில் கருத்துக்களைப் பதிவிடும்போது அறிந்து கொண்டு எம்மிடமும் கேட்டு பதிவிடுங்கள். அடுத்த தலைமுறையினரை தன்னம்பிக்கையுடைய சமூகமாக கட்டியெழுப்ப அனைவரும் மாறவேண்டும்.

நாடாளுமன்ற உறுப்பினர் சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்களும் நானும் இணைந்து எடுத்த முயற்சியின் பலனாக தற்போது மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 5 கல்வி வலயங்களுக்குமாக 3943 ரெப் கணணிகள்  கிடைக்கப் பெற்றுள்ளன.

மாவட்டத்தின் கல்வி வழற்சிக்கு நாம் ஒத்துழைப்பு வழங்கிக் கொண்டிருக்கின்றோம். இன்னும் நாம் கல்வித்துறைசார் வளர்ச்சியை மேம்படுத்துத்துவதற்காக பல்வேறுபட்ட செயற்றிட்டங்களை உருவாக்கிச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம். ஆளும்கட்சியில் இருக்கின்ற நாங்கள் ஒவ்வொரு துறைசார்ந்து வினைத்திறன் மிக்க சேவையை மேம்படுத்துவதற்காக அரசாங்கத்தினூடாக பெற்றுக் கொடுப்பதற்காக பல்வேறு வேலைத்திட்டங்கனை முன்னெடுத்து வருகின்றோம் என்றார்.