எதிர்கட்சிகளின் சர்வகட்சி ஒன்றிய முதலாவது கூட்டம்.

நாட்டின் எதிர்கால அரசியல் செயற்பாடுகள் குறித்து எதிர்கட்சிகளுக்கு மத்தியில் இணக்கப்பாடு ஒன்றை ஏற்படுத்திக் கொள்ளும் நோக்கில் எதிர்கட்சிகளின் சர்வகட்சி ஒன்றிய முதலாவது கூட்டம் நிதியாயமான சமூகத்திற்கான தேசிய இயக்கத்தின் தலைவர் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கொழும்பில் இடம்பெற்றது.

இந்த கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாஸ, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் சுமந்திரன், தமிழரசு கட்சி சார்பில் மாவை சேனாதிராஜா, தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் மனோ கணேசன், பழனி திகாம்பரம், ஐக்கிய தேசிய கட்சி சார்பில் ருவான் விஜேவர்த்தன, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் அமீர் அலி, 43வது படையணி தலைவர் சம்பிக்க ரணவக்க, மக்கள் கட்சி சார்பில் ஹேமகுமார நாணயக்கார மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான ராஜித சேனாரத்ன, ரஞ்சித் மத்துமபண்டார உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டனர்.

தற்போதைய அரசியல் நிலைமைகள் மற்றும் எதிர்கால அரசியல் செயற்பாடுகள் குறித்து இங்கு விரிவாக ஆராயப்பட்டது.