உதய கம்மன்பிலவை காப்பாற்ற ரணில் நடவடிக்கை.

அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திலிருந்து அரசாங்கத்தை காப்பாற்றுவதற்காக ஐக்கிய தேசிய கட்சித்தலைவர்  ரணில் விக்கிரமசிங்க நாளை (19) நாடாளுமன்றத்தில் ஒரு பிரேரணையை கொண்டு வர உள்ளதாக கொழும்புத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சருக்க எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் ஏற்கனவே அரசாங்கத்திற்குள் சில பிளவுகளை உருவாக்கியுள்ளதுடன், இந்த பிரிவைத் தடுக்கவும், அனைத்து அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்களின் வாக்குகளையும் அரசாங்கத்திற்கு பெறவும் அரசாங்கம் கடந்த சில நாட்களாக பல்வேறு நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது.

அதன்படி ரணில் விக்ரமசிங்க மூலம் இந்த முன்மொழிவை நாடாளுமன்றத்தில் முன்வைப்பதே அரசாங்கத்தின் திட்டம் என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கருதுகின்றனர்.

இந்த நிலைமை அறிவிக்கப்பட்டவுடன், எதிர்க்கட்சி எம்.பி.க்களும் நாளை அதற்கு பதிலளிக்க தயாராகி வருவதாக அறியப்படுகிறது.