கிழக்கு மாகாணத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் 168 கோவிட்   தொற்றாளர்கள்

அப்துல்சலாம் யாசீம்)
கிழக்கு மாகாணத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் 168 கோவிட்   தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளதாக கிழக்குமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.ஆர்.எம்.தௌபீக்  தெரிவித்தார்.

இன்று (16) வெள்ளிக்கிழமை கிழக்கு மாகாண கோவிட்  தொற்று தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
இதேவேளை கல்முனைப் பிராந்தியத்தில் அதிக அளவில் இனங் காணப்பட்டுள்ள நிலையில் 56 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 56 பேருக்கும் அம்பாரை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகத்தில் 30 பேருக்கும், திருகோணமலை மாவட்டத்தில் 26 பேருக்கும் கூற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதுவரை கிழக்கு மாகாணத்தில் மூன்றாவது அலையில் 12825 பேருக்கு தூக்கு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 288 மரணங்கள் சம்பவித்துள்ளதாகவும் வினோத்குமார் சுகாதார சேவைகள் பணிப்பாளர் குறிப்பிட்டார்.