அதிமேதகு ஜனாதிபதியின் செழிப்பு பார்வை திட்டத்தில் திருமலையில் மாமரக் கிராமம்.

(இஃஜாஸ் ஏ பரீட்) அதிமேதகு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் ‘செழிப்பு பார்வை’ கொள்கை அறிக்கைக்கு ஏற்ப நம் நாட்டில் ஏற்றுமதி பயிர்களை ஊக்குவிக்கும் நோக்கில் திருகோணமலை மாவட்டத்தில் கோமரங்கடவெல பகுதியில் ஒரு மா மரக் கிராமத்தை நிறுவும் திட்டம் நேற்று (14.07.2021) ஆரம்பித்து வைக்கப்பட்டதா.

இதனை திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்இ மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான கபில நுவான் அத்துக்கோரள அவர்கள் ஆரம்பித்து வைத்தார்.

இந்த கிராமத்தில் பயிரிடப்படும் மா மரங்கள் (டாம் ரூ ஜே.சி) மிகவும் அதிகளவில் காய்க்கும் விலையுயர்ந்த மரக்கன்றுகளாகும்.

இது செய்கை பண்ணப்பட்ட்டு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நல்ல சந்தையைக் கொண்டுள்ளது

மேலும் இந்த புதிய மரக்கன்றுகள் மூலம் செய்கை பண்ணப்பட்டு இலங்கை ஆண்டுக்கு 03 பருவங்களை அறுவடை செய்ய முடிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் இது தற்போது 02 பருவங்களை மட்டுமே அறுவடை செய்யப்படுகிறது.

இந் நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத், திருகோணமலை மாவட்ட செயலாளர் திரு. சமன் தர்ஷனா பாடிகோரலா, விவசாய அதிகாரிகள், மற்றும் ஊர் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.