கட்டுமுறிவு கிராம மக்களுடன் பிள்ளையான். வீடியோ

ரக்ஸனா) 

(ரக்ஸனா)

கட்டுமுறிவு கிராமம் உற்பத்திக் கிராமமாக ஆரம்பித்து வைப்பு.
மட்டக்களப்பு மாவட்டம் கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிற்க்குட்பட்ட வாகரை கட்டுமுறிவு கிராமத்தை உற்பத்திக் கிராமமாக வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு புதன்கிழமை(14) நடைபெற்றது. இதன்போது மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத் தலைவருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்.
மண் வளமும்இ நீர் வளமும்இ அப்பகுதியில் ஒருமித்து காணப்படுவதனால் கௌப்பிஇ நிலக்கடலை போன்ற பயிர்செய்கைகளை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகளையும் அங்குள்ள மக்கள் முன்னெடுத்துள்ளார்.
இதன் போது பாரிய அளவான உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு சௌபாக்கிய திட்டத்தின் மூலமாக நீர் இறைக்கும் இயந்திரங்களையும் மேலும் சில கடன் உதவிகளையும் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் வழங்கி வைத்திருந்தார். இவ்வாறான உள்ளூர் உற்பத்தி மற்றும் சுய பொருளாதாரத்தினை கட்டி எழுப்புவதன் மூலம் எதிர்காலத்தில் உற்பத்தியில் தன்னிறைவு அடைந்த ஒரு ஆரோக்கியமான வளமான சமூகத்தை கட்டியெழுப்ப முடியும் என இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
இதன்போது மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி சசிகலா புண்ணியமூர்த்தி மற்றும் கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலக அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.