வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் முகமாக இயந்திர படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

(க.ருத்திரன்) மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மீனவர் கிராமமான பறங்கியாமடு கிராமத்தின் மக்களின் நன்மை கருதி அவர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் முகமாக இயந்திர படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
‘புணர்வாழ்வும் புதுவாழ்வும்’ என்ற புலம்பெயர்ந்தோர் அமைப்பினால் இவ் மனிதநேய உதவி வழங்கி வைக்கப்பட்டது.
16 இயந்திரப் படகுகள் மற்றும் வலைகள்இஎன்பன வழங்கி வைக்கப்பட்டன. இவை ஒவ்வென்றும் தலா 6 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியானதாகும். இவை ஒவ்வொன்றையும் 5 குடும்பங்களின் ஒன்றிணைந்த செயற்பாட்டுடன் தங்களது கடல் தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வண்ணம் வழிமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் இக் கிராமத்தில் வீடற்று அடிப்படை வசதிகளற்று வாழ்ந்து வரும் பயணாளிகள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு 43 வீடுகள்இ30 கிணறுகள்இ40 மலசல கூடங்களுடன் மேலும் 40 மலசல கூடங்கள் புதிதாக புணர்தாரனம் செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளதாக மேற்படி அமைப்பின் இலங்கைக்கான இணைப்பாளர் பொறியியலாளர் கென்றி அமல்ராஜ் தெரிவித்தார். இவ் திட்டத்திற்கான நிதி செலவு 32 மில்லியன் ஆகும் என்றும் மக்கள் தங்களிடம் விடுத்த தேவைகளை நிறைவேற்றிக் கொடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை இவ் செயற்பாடுகளை திறன்பட மேற்கொள்வதற்கு உதவி புரிந்த ஜக்கிய இராட்சியம்இஜக்கிய அமெரிக்காஇமலேசியா சிங்கபூர் ஆகிய நாடுகளில் வசிக்கும் புலம் பெயர் சமூகத்தின் நிதி பங்களிப்பிலே மேற்கொண்டதாகவும் அவர்களின் நம்பிக்கைக்கு ஏற்ற வகையில் பறங்கியாமடு மக்கள் கடல் தொழிலை மேற்கொண்டு பொருளாதாரத்தில் முன்னேற்றமடையவேண்டும் என இவ் அமைப்பின் ஜக்கிய இராட்சியத்திற்கான இணைப்பாளர் கலாநிதி வே.சர்வேஸ்வரன் தமது உரையின்போது தெரிவித்தார்.
குறித்த நிகழ்வில் அதிதிகளாக மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந் மற்றும் கிரான் பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாவு ஆகியோர்கள் கலந்து கொண்டனர். மேற்படி கிராமத்தினை தெரிவு செய்து மக்களின் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி புத்துயிர் கொடுத்த ‘புணர்வாழ்வும் புதுவாழ்வும்’ அமைப்பிற்கும் நண்கொடையாளர்களுக்கும் தமது நன்றியை தெரிவித்தார்.