செப்டம்பர் மாதத்திற்குள் இலங்கை முழுவதுமாக திறக்கப்படும். நம்பிக்கையை வெளிப்படுத்துகின்றார்இராணுவ தளபதி

செப்டம்பர் மாதத்திற்குள் இலங்கை முழுவதுமாக திறக்கப்படும் என்று இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தடுப்பூசியைப் பெற தகுதியுள்ள மக்கள் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றிருப்பதால், நாட்டைத் திறப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக ஜெனரல் சில்வா கொழும்பு ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்..

எவ்வாறாயினும், இது அந்த நேரத்தில் தற்போதைய சூழ்நிலையைப் பொறுத்தது என்று கூறியஅவர், ஒரு வைரஸை நாங்கள் கையாண்டு வருகிறோம், அது தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது, புதிய முன்னேற்றங்களை வெளிப்படுத்துகிறது என்றார்.