இரு மாதங்களின் பின்னர் மட்டு.மாவட்டத்திலிருந்து கொழும்பு உட்பட தூர இடங்களுக்கான பஸ் சேவைகள் ஆரம்பம்

ரீ.எல்.ஜவ்பர்கான்
பயணத்தடை மற்றும் மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடைகள்  காரணமாக சுமார் இரு மாதங்களாகத் தடைப்பட்டிருந்த மட்டக்களபிற்கும் கொழும்பு உட்பட தூர இடங்களுக்குமான பஸ் சேவைகள் இன்று காலை முதல்  ஆரம்பமாகின.
இலங்கை போக்கு வரத்துச் சபையின் மட்டக்களப்பு டிப்போ ஊடாக குறித்த பஸ் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு டிப்போ முகாமையாளர் தெரிவித்தார்.
இன்று அத்தியாவசிய மற்றும் காரியாலய சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.கொரோனா சுகாதார நடைமுறைகளைப் பேணி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இன்று அதிகாலை 6.30மணிக்கு மட்டக்களப்பிலிருந்து கொழும்பிற்கான முதலாவது பஸ் சேவை ஆரம்பமானது.பதுளை யாழ்ப்பாணம் மன்னார் போன்ற தூர இடங்களுக்கும் பஸ் சேவைகள் இடம் பெற்றன