கொட்டக்கலை மற்றும் தலவாக்கலை பிரதேச ஆசிரியர்களுக்கு நாளை தடுப்பூசி

தலவாக்கலை பி.கேதீஸ்

கொட்டக்கலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட 44 பாடசாலைகளில் கடமை புரியும் சுமார் ஆயிரத்திற்கு அதிகமான ஆசிரியர்கள்,அதிபர்கள்,பத்தனை ஸ்ரீபாத தேசிய கல்லூரியின் உத்தியோகத்தர்கள்,கொட்டக்கலை ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் உத்தியோகத்தர்கள் மற்றும் பாடசாலைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் 14.7.2021 காலை முதல் மாலை வரை சினோபாம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் கொட்டக்கலை தமிழ் வித்தியாலயத்தில் வழங்கப்படவுள்ளது என கொட்டக்கலை பொது சுகாதார அதிகாரி சௌந்தர் ராகவன் தெரிவித்தார்.

அதேவேளை லிந்துலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட 67 பாடசாலைகளில் கடமை புரியும் 920 ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு நாளை முதல் சினோ பாம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் வழங்கப்படவுள்ளது என்று லிந்துலை பொது சுகாதார வைத்திய அதிகாரி ஜனாத் அபேகுணவர்தன தெரிவித்தார். தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் 14.7.2021 லிந்துலை பொது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திலும், 15.7.2021 அக்கரபத்தனை ஹோல்புறூக் தமிழ் வித்தியாலயத்திலும், 16.7.2021 மெராயா தமிழ் மகா வித்தியாலத்திலும்  முன்னெடுக்கப்படும். பாடசாலைகளில் பணி புரியும் அதிபர்,ஆசிரியர்கள், பாடசாலைகளில் பணிபுரியும் ஊழியர்கள் தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்ள முடியும் எனவும் வைத்திய அதிகாரி தெரிவித்தார்.