முதல் மாதச்சம்பளத்தை  தாயக சிறுநீரக நோயாளிக்கு வழங்கிய சுவிஸ் தமிழ் மருத்துவர்

சுவிஸ்லாந்து கியாசோ  நகரில் வசிக்கும் செல்வி. நிவித்தா  வைத்தியத்துறை மன நல வள படிப்பை நிறைவு செய்து தனது முதல் மாத வருமானத்திலும் தனது  பிறந்தநாள் பரிசாகவும் அம்பாறை மாவட்டத்தில் அக்கரைப்பற்றில்
இரண்டு சிறுநீரகங்கள் செயலற்ற தந்தை,இரண்டு பெண் பிள்ளைகளையும் கொண்ட வறுமையில் வாடும் குடும்பத்தினருக்கு காய், கனி வியாபாரத்திற்கான கடை கட்டுமானம்,மற்றும் மூலதன நிதி உதவியையும் வழங்கி வைத்துள்ளார்.

சுவிஸ்லாந்து  லுட்சேன் நகரத்தை தலைமையகமாகக்கொண்டு இயங்கும் பரததர்சனா வாழ்வாதார உதவி நிறுவனத்தின் ஊடாக இவ்வுதவிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

வாழும் வீட்டுடன் இணைந்த கடை கட்டுமான பணிகள்
விரைவுபடுத்தப்பட்டுள்ளது.

மருத்துவம் என்பது நோய்களை குணப்படுத்துவற்கான கலையும்,அறிவியலும்.அது  மனித மனங்களையும் மகிழ்விக்கும் என தான் கற்ற மன,நல,வள கல்வியை கனியாக்கிய ‘நிவித்தா ‘.வின் மனித நேய பணிகள்தொடர வேண்டுமென பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.