புளொட் லண்டன் கிளை உலருணவு நிவாரணம் விநியோகம்!

( சகா) தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் மற்றும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி ஆகியவற்றின் லண்டன்கிளையினர் வடக்கு கிழக்கில் கொரோனாவால் வாழ்வாதாரத்தையிழந்த மக்களுக்கு உலருணவு நிவாரணத்தை வழங்கிவருகிறது.

அதன் ஓரங்கமாக அம்பாறை மாவட்டத்திலுள்ள முன்னாள் கழக போராளிகளின் குடும்பங்கள் மற்றும் நலிவுற்ற குடும்பங்களுக்கு நேற்று காரைதீவில் வைத்து முதற்கட்டமாக ஒரு தொகுதி நிவாரணம் வழ ங்கப்பட்டது.


திருக்கோவில், பனங்காடு ,வளத்தாப்பட்டி ,மல்வத்தை, காரைதீவு ,முனையக்காடு போன்ற கிராமங்களிலிருந்து 26குடும்பங்களுக்கு இவ் உலருணவு நிவாரணம் வழங்கப்பட்டன.,
கழகத்தின் அம்பாறைமாவட்ட செயற்பாட்டாளர்களான பி.ரவிசந்திரன்(சங்கரி) பி.நாகராஜா(கங்கா) ஆகியோர் இந்நிவாரணத்தை வழங்கிவைத்தனர்.