மருதமுனையில் துப்பாக்கி ரவைகள் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து தீவிர தேடுதல்.

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பொலிஸ் நிலையத்துக்கு உட்பட்ட மருதமுனை – 5 ஹம்ரா வீதியில் வசித்துவரும் அப்துல் கரீம் பெளசுல் அமீன் என்பவது வீட்டின் கூரைப் பகுதியில் துப்பாக்கி ரவைகள் -15 இன்று (07.07.2021) பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகலையடுத்து கண்டெடுக்கப்பட்டன.

இதனை அடுத்து குறித்த வீட்டிற்கு விரைந்த அம்பாறை தடையவியில் குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினர் விசேட தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். பொலிசார், விசேட அதிரடிப்படையினர் ஒன்றிணைந்து மோப்ப நாயின் உதவியோடு குறித்த வீடு அமைந்துள்ள பகுதிகளில் விசேட தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

வீட்டு உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் தொடர்ந்தும் விசாரணை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.