பஷீருக்கு மொட்டு கட்சியின் தேசிய பட்டியலை வழங்குவது சிறப்பு.

தமிழ் மக்களுடன் சேர்ந்து அரசியல் செய்கின்ற முன்னாள் அமைச்சர் பஷீர் சேகு தாவூத் மொட்டு கட்சியின் தேசிய பட்டியல் எம். பியாக நியமிக்கப்பட வேண்டும் என்று ஜனநாயக இளைஞர் அமைப்பு தெரிவித்தது.

அமைப்பின் தலைவரும் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினருமான ஆறுமுகம் ஜோன்சன்இ பொது செயலாளர் கோபாலபிள்ளை மிதுஜன் ஆகியோர் நேற்று புதன்கிழமை அக்கரைப்பற்றில் ஊடகவியலாளர் மாநாடு மேற்கொண்டனர்.

இதன்போது இவர்கள் தெரிவித்தவை வருமாறு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வியூகம் வகுப்பாளரும்இ பொருளாதார அபிவிருத்தி முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஸவின் பாராளுமன்ற மீள்பிரவேசம் நாட்டுக்கும்இ மக்களுக்கும் பெருநன்மைகளை தருகின்ற மாற்றங்களுக்கான திறவுகோல் ஆகும்.

நாட்டை நேசிக்கும் மக்கள் அனைவரினதும் ஒருமித்த எதிர்பார்ப்பு இவ்விதமாக நிறைவேறி இருப்பதை ஜனநாயக இளைஞர் அமைப்பினராகிய நாமும் வரவேற்று வாழ்த்துவதோடு நாட்டினதும்இ மக்களினதும் அபிவிருத்தியை நோக்கிய பயணத்தில் அவருடன் இணைந்து பணியாற்றுவோம் என்பதையும் இத்தால் அறிய தருகின்றோம்.

பசில் ராஜபக்ஸவின் பெருவிருப்பம், வியூகம் ஆகியவற்றுக்கு அமைய முன்னாள் அமைச்சர் பஷீர் சேகு தாவூத்துக்கு மொட்டு கட்சி மூலம் தேசிய பட்டியல் எம். பி பதவி வழங்கப்பட இருப்பதாகவும் அறிய கிடைக்கின்றது. தற்போது இது சிறுபான்மை மக்களின் விசேட எதிர்பார்ப்பாகவும் மாறி உள்ளது.

பசீர் சேகு தாவூத் தமிழ் மக்களை அரவணைத்து அரசியல் செய்பவர். தமிழ் மக்கள் மூலமாகவே அரசியலுக்கும், பாராளுமன்றத்துக்கும் பிரவேசித்தவர். தமிழ் – முஸ்லிம் உறவுக்கு பாலமாக விளங்குபவர்.

பெரும்பான்மை சிங்கள மக்களால் எவ்வாறு ஏற்று கொள்ளப்பட்டு உள்ளாரோ அவ்வாறே தமிழ் மக்களாலும் ஏற்று கொள்ளப்ப்பட்ட சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த தலைவராக மிளிர்கின்றார்.

இவர் ஆளும் மொட்டு கட்சியின் தேசிய பட்டியல் எம்.பியாக நியமனம் வழங்கப்படுவதை நாட்டையும், மக்களையும் நேசிக்கும் அனைவரும் நிச்சயம் வரவேற்பார்கள் என்பதில் எவ்விதமான சந்தேகமும் கிடையாது. நாமும் அதை வரவேற்கின்றோம்.