மட்டக்களப்பில் விழிப்புலனர்வற்ற 80 குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள் கையளிக்கப்பட்டுள்ளது!

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) விழிப்புலனர்வற்ற 80 குடும்பங்களுக்கு மட்டக்களப்பில் உலருணவுப் பொதிகள் கையளிக்கப்பட்டுள்ளது.

அந்த அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள விழிப்புலனற்ற உறுப்பினர்களைக்கொண்ட 80 குடும்பங்களுக்கு உலருணவுப்பொதிகள் கையளிக்கும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை 06.07.2021 நடைபெற்றது.

வொயிஸ் பவுண்டேஷன் அமைப்பு இதற்கான நிதியினை வழங்கியிருந்தது.

அமைப்பின் கிழக்கு மாகாண இணைப்பாளரும் மதபோதகருமான எஸ்கே. விஸ்வநாத் தலைமையில் உதயம் விழிப்புலனற்றோர் சங்கத்தின் அலுவலக வளாகத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது.

களுவாஞ்சிக்குடி, வாழைச்சேனை, செங்கலடி, கிரான், மற்றும் ஆரையம்பதி போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த 80 விழிப்புலனற்றவர்கள் இப்பொதிகளைப் பெற்றுக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.