மட்டக்களப்பு ஆதீனத்தின் ஏற்பாட்டில் பிரித்தானியா தமிழர் கிரிகெட் சம்மேளனத்தின் நிதிப் பங்களிப்பில் ஒருதொகுதி உலருணவு நிவாரணப்பொதிகள் பாணமையில் வழங்கிவைக்கப்பட்டது.
கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தின் தென் கோடியில் அமைந்துள்ள பாணமை என்னும் பின்தங்கியகிராமத்தில் உலருணவு நிவாரணம் வழங்கப்பட்டது.
அங்கு பெரும்பான்மை சிங்கள மக்களோடு சிறுபான்மையாக வாழ்கின்ற தமிழர்கள் மிகவும் துயரத்தோடு வாழ்வதை அறிந்து மட்டக்களப்பு ஆதீனம் இந்நிவாரணப்பொருட்களை இருசமுகத்தினருக்கும் வழங்கியது.
பேரிடர்கால பெருந்துயர் துடைக்கும் அம்பாறை மாவட்டக் குழுவின் தலைவர் வீ.ரி. சகாதேவராஜா தலைமையில் பாணமையில் இருக்கக்கூடிய இரு சமூகங்களுக்கும் இந்த உலருணவு பொருட்கள் வழங்கப்பட்டது.
இதில்இ மட்டக்களப்பு ஆதீனத்தின் தலைவர் மு.ஜெயபால் மற்றும் பிரபல சமுகசெயற்பாட்டாளரும் குழுவின் காப்பாளரும் காரைதீவு பிரதேச சபை தவிசாளருமான கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் கலந்து கொண்டு நிவாரணப்பொருட்களை வழங்கிவைத்தார்.