பஸிலிற்காக எம்.பி பதவியினை இராஜினாமா செய்த ஜயந்த கெட்டகொட.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ஷ, தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக நியமிப்பதற்கு தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியினை ஜயந்த கெட்டகொட இராஜினாமச் செய்துள்ளார்.

இவர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தான் இராஜினாமா செய்து கொள்வதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்கவுக்கு இன்று 06ம் திகதி இதனை எழுத்துமூலமாக அறிவித்தார்.

அதற்கமையஇ ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினர் பதவியில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருக்கு எழுத்துமூலம் அறிவிப்பதற்கு பாராளுமன்ற செயலாளர் நாயகம் நடவடிக்கை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.