கல்முனையில் வீதிக்கு இறங்கிய கிராம சேவையாளர்கள்.

பாறுக் ஷிஹான்

கல்முனை வடக்கு பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட   காணி விடயம் ஒன்றினை பார்வையிட சென்ற  கிராம சேவையாளரை தாக்கியதை கண்டித்து இன்று (5) போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

பிரதேச செயலக முன்றலில் மதியம் ஒன்று கூடிய கிராம சேவகர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்ததுடன் இறுதியாக பிரதேச செயலாளர் ஜெ.அதிசயராஜிடம் மகஜர் கையளிக்கப்பட்டது.

இதன் போது கிராம உத்தியோகத்தரின் பாதுகாப்பினை உறுதிப்படுத்து எமது பிரிவின் கடமையை எம்மை செய்யவிடு அரச கடமையினை செய்கின்ற கிராம சேவகரை தாக்கியதை வன்மையாக கண்டிக்கின்றோம் அரச அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு செய்யாதே போன்ற வாசகங்களை போராட்டக்காரர்கள் ஏந்தி இருந்ததை காண முடிந்தது.