கிழக்கில் மொத்தமாக 246 கொவிட் மரணங்கள் பதிவு.

(ஹஸ்பர் ஏ ஹலீம்) கிழக்கு மாகாணத்தில் கடந்த 24 மணித்தியாலயத்தில் 160 கொவிட்19 தொற்றாளர்கள் இணங்காணப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் டாக்டர் ஏ.ஆர்.எம்.தௌபீக் தெரிவித்தார்.

இதில் திருகோணமலை மாவட்டத்தில் 02,மட்டக்களப்பு 111, அம்பாறை 05, கல்முனை 42 எனவும் புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டதாகவும் தெரிவித்தார்.

கொரோனாவின் மூன்றாம் அலையில் மொத்தமாக இற்றை வரைக்கும் கிழக்கு மாகாணத்தில் 11253 தொற்றாளர்களும் 246 மரணங்களும் பதிவாகியுள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.