வேகக்கட்டுப்பாட்டை மீறிய முச்சக்கர வண்டி விபத்து

பாறுக் ஷிஹான்
வீதியில் பயணம் செய்த முச்சக்கரவண்டி ஒன்று வேகக்கட்டுப்பாட்டை  மீறி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று(1)   அம்பாறை மாவட்டம்  சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்முனை – அக்கரைப்பற்று பிரதான வீதி காரைதீவு பொது சந்தைக்கு முன்பாக வேகக்கட்டுப்பாட்டை கட்டுப்படுத்த முடியாமல் முச்சக்கர வண்டி வீதியை விட்டு விலகி வயல் காணிக்குள் விழுந்து  விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்து சம்பவம்  தொடர்பான மேலதிக விசாரணையை சம்மாந்துறை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.