முழு கிராமத்திற்கும் உலர் உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.

????????????????????????????????????

Covid 19 காரணமாக தங்களது பொருளாதாரங்களை இழந்த மக்களுக்கு பிரதேச இளைஞர்களின் முயற்சியினால் பிரதேசத்தில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் உலர் உணவு பொருட்கள் வழங்கப்பட்ட சம்பவம் மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் இடம் பெற்றுள்ளது.

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் மாவடிச்சேனை கிராமத்தில் உள்ள சமுக மட்ட அமைப்புக்களின் கூட்டிணைந்த முயற்சியினால் மாவடிச்சேனை அனர்த்த நிவாரண குழு என்ற பெயரில் பிரதேசத்தில் உள்ள பள்ளிவாயல்கள் விளையாட்டு கழகங்கள் சமுக மட்ட அமைப்புக்கள் ஒன்றிணைந்து இவ் வேலைத்திட்டத்தினை முன்னெடுத்துள்ளது.

மாவடிச்சேனை பிரதேசத்தில் உள்ள கூலி தொழிலாளர்கள் வியாபாரிகள் அரச உத்தியோகத்தர்கள் என்று அனைவருக்குமாக 1150 குடும்பங்களுக்கு 2100ரூபா பொறுமதியான உலர் உணவு பொருட்கள் இருபத்திநாலு லட்சத்தி பதினையாயிரம் (2415000ரூபா ) ரூபா பெறுமதியில் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.