திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மருத்துவம் சாராத உபகரணப் பொருட்கள் வழங்கி வைப்பு.

(அப்துல்சலாம் யாசீம்) திருகோணலை பொது மருத்துவமனையில் STREET CHILD நிறுவனத்தின் அனுசரணையுடன் ஜனாதிபதி செயலணியின் திருகோணமலை மாவட்ட COVID 19 பதிலிறுத்தலுக்கான இணைப்பாளரதும் அரச சார்பற்ற நிறுவனங்களின் சம்மேளனத்தினுடாகவும் ரூபா ஒரு லட்சத்து ஐம்பதினாயிரம் பெறுமதியான சில மருத்துவம் சாராத உபகரணப் பொருட்கள் திருகோணமலை பொது மருத்துவமனை பணிப்பாளர் டொக்டர் ஜகத் விக்ரமரத்ன அவர்களிடம் திருகோணமலை மாவட்ட COVID 19 பதிலிறுத்தலுக்கான இணைப்பாளர் டொக்டர் என். ரவிச்சந்திரன் மற்றும் திரு கஜேந்திரன், திட்ட முகாமையாளர் STREET CHILD  ஆகியோரது கரங்களால் நன்கொடையாக வழங்கி வைக்கப் பட்டன.

 

இந் நிகழ்வில் ஜனாதிபதி செயலணியின் கொவிட் 19 பதிலிறுத்தலுக்கான திருகோணமலை மாவட்ட இணைப்பாளரும் திருகோணமலை மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் சம்மேளனத் தலைவருமான டொக்டர் என். ரவிச்சந்திரன் அவர்களுடன், திருகோணமலை பொது மருத்துவமனை பணிப்பாளர் டொக்டர் ஜகத் விசக்ரமரத்ன, STREET CHILD நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் திரு. அ.கஜேந்திரன் அவர்களும், அதே நிறுவனத்தின் தொண்டர் சேவையாளர் திரு. என். பிருந்தாவனன் மற்றும் பொது மருத்துவமனையை சேர்ந்த டொக்டர் ஜீ. பெர்னாட், டொக்டர் நசாயா, தாதி உத்தியோகத்தர் திரு. விமலசாந்தன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.