உதவும் கரங்கள் அமைப்பினால் ரதெல்ல வைத்தியசாலைக்கு உபகரணங்கள் கையளிப்பு.

(தலவாக்கலை பி.கேதீஸ்) இரத்தினபுரி உதவும் கரங்கள் அமைப்பின் ஊடாக நானுஓயா ரதெல்ல தோட்ட வைத்தியசாலைக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் மருந்து பொருட்கள் கையளிக்கப்பட்டன. இரத்தினபுரி உதவும் கரங்கள் அமைப்பின் ஆலோசகரும் தேசிய கல்வி நிறுவனத்தின் சிரேஸ்ட விரிவுரையாளருமான கலாநிதி எஸ்.கருணாகரன் அவர்களினால் இப்பொருட்கள் ரதெல்ல தோட்ட அதிகாரி டில்ரோய் மனோகரிடம் கையளிக்கப்பட்டன. இந்நிகழ்வில் ஹேலீஸ் கம்பனியின் மனித வள பொறுப்பதிகாரி எஸ்.ராம், நுவரெலியா மாவட்ட செயலக உத்தியோகத்தர் ஆர்.சதீஸ், இரத்தின புரி உதவும் கரங்கள் அமைப்பின் உறுப்பினர்கள் உட்பட மற்றும் பலர் கலந்துக்கொண்டனர்.