உலர் உணவு விநியோகம் செய்யும் நடவடிக்கை கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் ‘ஹெல்ப் எவர்;’ நிறுவனத்தால் வழங்கிவைப்பு.

(க.ருத்திரன்) நாட்டில் முடக்கல் நிலை ஏற்பட்டுள்ள இந்த சூழ்நிலையில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு துன்பத்திற்குள்ளாகியுள்ள மக்களுக்கான உலர் உணவு விநியோகம் செய்யும் நடவடிக்கை கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் ‘ஹெல்ப் எவர்;’ என்ற தன்னார்வ அமைப்பினால் ‘வறுமையை ஒழித்து வளாச்;சியை காண்போம்’ என்ற தொணிப் பொருளில் முன்னெடுக்கப்பட்டது.
கிரான்இகோரகல்லி மடுஇசந்தி வெளிஇமுறக்கொட்டான்சேனை ஆகிய கிராமங்களில் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு இவ்வுலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது. கிரான் பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாவு இவ்வுலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்தார்.
இதற்கான நிதி அனுசரணையினை கனடா நாட்டினைச் சேர்ந்த சா.ஜீவானந்தராசா வழங்கி வைத்தார்.