கந்தளாய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 150 குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கி வைப்பு.

(எப்.முபாரக்) திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் குறைந்த வருமானம் பெறும் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் 150 குடும்பங்களுக்கு அல் ஹிக்மா பவுண்டேசன் அமைப்பின் ஏற்பாட்டில் உலருணவுப் பொதிகள் இன்று(25) வழங்கி வைக்கப்பட்டன.

கந்தளாய் பிரதேசத்தின் பேராறுஇமத்ரஸாநகர் மற்றும் இரண்டாம் குலனி போன்ற பகுதியிலுள்ள வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கே உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
இவ் உலருணவுப் பொருட்களை அல் ஹிக்மா பவுண்டேசன் பணிப்பாளர் கலாநிதி இபாதத்துல்லாஇதிருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர் ஏ.டபிள்யு வாலுக்கஇகந்தளாய் பிரதேச சபை உறுப்பினர் ஏசிஎம்.ஜவாஹிர் மற்றும் மதத்தலைவர்கள் கலந்து கொண்டு வங்கி வைத்தார்கள்.